Posts

Showing posts from January, 2019

குடியரசு தினம் 26/01/19

Image
குடியரசு தின விழா          69 ஆவது குடியரசு தின விழா நமது பாரத் கல்வியல் கல்லூரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முதல் நிகழ்வாக கல்லூரி வளாகத்தில் காலையில்உணவு மேலாண் துறை மாணவர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. பின் அதனை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு  பின் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்.         அதன் பிறகு திரு . அறவாழி அவர்கள் உறுதிமொழி கூற அதை மீண்டும் மாணவர்கள் கூறினார்கள். பாரத் கல்லூரி முதல்வர் டாக்டர். வீராசாமிஅவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் கல்வியல் கல்லூரிமுதல்வர் சிறப்புரையாற்றினார். இறுதியாக இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.

விளையாட்டு தினம் 22/01/19

Image
விளையாட்டு போட்டி      எனது கல்வியியல் கல்லூரியில் விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் குண்டு எறிதல், நீளம் தாண்டுதல் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப் பந்தயம் மற்றும் ஆண்களுக்கான  800மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. தில் வெற்றி பெற்ற மாணவர்கள் அருண் கல்வியில் கல்லூரிக்கு சென்று மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர்.       இதில் மாநில அளவில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில்  எமதுகல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவன் மணியரசன் இரண்டாம் பரிசையும் பெற்றார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பொங்கல் பண்டிகை...

Image
சமத்துவ பொங்கல் விழா    பொங்கல் திருவிழா எங்கள் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. அதில் நம் நாட்டின் பாரம்பரிய மண்பாண்டங்களை வைத்து பொங்கல் வைத்தோம். இதன்  முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து இந்த விழாவினை கொண்டாடினோம். இவ்விழாவில்  எமது கல்வியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து சமத்துவ பொங்கல் வைத்தோம்.          இதில் சிறப்பு விருந்தினராக  எமது கல்லூரி செயலர் அம்மா அவர்கள் பால் பொங்கும் நேரத்தில் குலவை சத்தம் போட்டு பொங்கலை மகிழ்ச்சியாக தொடங்கி வைத்தார். பிறகு பாரத் கல்வியியல் கல்லூரி மாணவிகள் மூன்று பிரிவாக பிரிந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பொங்கல் விழா நடைபெற்றது.         பின்பு நானும் என் தோழிகளும் இணைந்து கும்மியடித்து மகிழ்ந்தோம். நான் இந்த பொங்கல் விழாவில் முதன்முறையாக மண்பானையில் பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடினேன். மிகவும் மகிழ்ச்சியை தந்தது.  ...