பரியேறும் பெருமாள் திரைப்படம்

பரியேறும் பெருமாள்





     செயலர் அம்மா அவர்களின் விருப்பத்திருக்குஏற்ப  5/10/18 இன்று தஞ்சாவூரில் உள்ள  GV திரையரங்கில் பரியேறும் பெருமாள் திரைப்படம் பார்க்க கல்லூரி பேருந்தில் சென்றோம். இரண்டாவது காட்சி வேலையில் படம் பார்க்க சென்றோம்  அதில் முதல்வர் மற்றும் பேராசிரியர்களும் வந்தனர் தாழ்த்தப்பட்ட மக்கள் படும் துயரத்தை இந்த படத்தில் ப. ரஞ்சித்  இயக்குனர் தெளிவாக காட்டினார். படம் பார்த்த பின்பு கல்லூரி பேருந்தில் கல்லூரிக்கு வந்து சேர்ந்தோம்  .


     சாதியக் கொடூரத்தின் இரு வேறு அடுக்களில் உள்ள மனிதர்களின் மனதை நெருக்கமாக படம்பிடித்துக் காட்டியதன் மூலம் தமிழின் முக்கிய சினிமாக்களில் ஒன்றாக கம்பீரமான தன் நடையை தொடங்கியிருக்கிறான் பரியேறும் பெருமாள். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகில் உள்ள புளியங்குளம் எனும் கிராமம்தான் திரைப்படத்தின் களம். புறந்தள்ளியே வைக்கப்படுகிற ஒடுக்கப்பட்ட சமூகத்தின் ஓங்கி ஒலிக்கும் குரலாய் தான் மாற வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டு, “பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் மேல ஒரு கோடுஎன்றபடியே வளர்கிறார் கதை நாயகன் பரியன் என்கிற கதிர். ஆனால், அதனை கடந்து வருதல் உலகமயமாதலுக்குப் பின்பான இன்றைய காலக்கட்டத்திலும் எத்தனை ரணமானது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ். கதையை காட்சிகளாய் விரித்ததில் உள்ள மாரியின் மனக்கடல் போற்றுதலுக்குரியது. எந்த பேதமுமில்லை என்பதைக் காட்டுவதோடு நிறைவாகிறது பரியேறும் பெருமாள்திரைப்படம். ஆனால், அதனை அனைவரும் உணர்ந்து சாதியத்தை புறந்தள்ளுவதிலேயே இருக்கிறது படத்தின் உண்மையான வெற்றி...





























































 

 



Comments

Popular posts from this blog

பாரதி உலா

பாரதி உலா

ஆசிரியர் தினவிழா