Posts

Showing posts from February, 2019

புனித அந்தோனியார் நடுநிலை பள்ளி

Image
புதுமைப் பள்ளி பார்வையிடல்           புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி    மானம்புச்சாவடி அமைந்துள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அமைந்துள்ளது. விடுதி வசதியும் உள்ளது. இங்கு பயிலும் சில மாணவர் மாணவிகளுக்கு தாய் தந்தையற்ற அனாதை குழந்தைகள். அவர்கள் அரசு உதவியுடன் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி அரசு உரிமை பெற்ற பள்ளியாகும்.    அங்குள்ள பெண் பாதிரியார்கள் எங்களுடன் அன்பாக பழகினார். இரண்டு நாட்கள் ஆங்கில வகுப்பு நடக்கும்போது உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஸ்பாடிக்ஸ் மேல்நிலை பள்ளி

Image
புதுமைப் பள்ளி பார்வையிடல்         இன்று இந்த பள்ளிக்கு வந்தோம். இங்கு மழலையர் முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியின் முதல்வர் கீழே உள்ள கிராமத்தை சேர்ந்தவர். இரண்டு நாட்கள் இப்பள்ளிக்கு உற்றுநோக்கல்  பயிற்சிக்காக வந்திருக்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தகுந்த மரியாதையுடன் எங்களை வரவேற்றனர்.         தனியறை கொடுக்கப்பட்டது. இங்கு உள்ள குழந்தைகளும் ஆசிரியர்களும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டனர்.   இங்கு காலையில் நடைபெறும் இறைவழிபாடு மிகவும் சிறப்பாக உள்ளது. அதில் எங்களுக்காகவும் வேண்டிக்கொண்டனர். இரண்டு நாட்கள் உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புது புது தகவல்களை அறிந்துகொண்டேன்.

ராஜா அரசினர் மேல்நிலைப்பள்ளி

Image
புதுமைப் பள்ளி பார்வையிடல்                           ராஜா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் உற்றுநோக்கல் பயிற்சிக்காக சென்றோம்.  நாங்கள் எட்டுப்பேர் ஒரு குழுவாக சென்றோம். ராஜா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. தலைமையாசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் அவர்கள் எங்களுக்கான உற்றுநோக்கல் பயிற்சி  எடுப்பதற்கு அனுமதி அளித்தனர். தகுந்த மரியாதையுடன் நடத்தினார். நான் ஆங்கில வகுப்பு நடக்கும் போது சென்றேன். உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். அரசு பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர் எவ்வாறு இருப்பர் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் பலவகையான மாணவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். நான் வகுப்பு எடுத்தேன். மேலும் வகுப்பை கண்காணிப்பதற்கும் சென்றேன்.