தேர்தல் விழிப்புணர்வு பேரணி

தேர்தல் விழிப்புணர்வு


           பாராளுமன்ற தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஆட்சியர் கல்வியல் பல்கலைக்கழகம்  தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை  நடத்துமாறுசுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி பாரத் கல்வியியல் கல்லூரி முதல்வர் அவர்கள் பாரத் கல்வியல் குழும செயலர் திருமதி புனிதா கணேசன் அவர்களின்ஒப்புதலின் பெயரில் கல்வியல் கல்லூரி முதல்வர் திருமதி. ப. சுபத்ரா மற்றும் பேராசிரியர்கள் கலந்துரையாடி அன்று தேர்தல் விழிப்புணர்வு பேரணி செல்ல முடிவெடுத்தனர்.





                    கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது தொடர்ந்து எங்கள் கல்வியல் கல்லூரி  பொருள் அறிவியல் துறை பேராசிரியர் சுரேஷ் குமார் அவர்கள் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் அனுமதி பெற்று பின்பு அனுமதி பெற்ற ஒப்புதல் கடிதத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவ கல்லூரி காவல் நிலையத்திலும் வழங்கி அவர்களின் அனுமதி பெற்றார்.






             அதனைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் 11 மணி வரை விழிப்புணர்வு பேரணி எங்கள் கல்லூரி வாயிலில் இருந்து நடைபயணம் தொடங்கியது. இதன் முதன்மை நோக்கமானது  மக்களின் 100% வாக்கினை  அளிக்க வேண்டும் என்று உனது ஓட்டு உனது எதிர்காலம் என்று வலியுறுத்தினோம்.


               பிறகு கலைஞர் நகரை தொடர்ந்து அடுத்துள்ள  ரகுமான் நகருக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் தேர்தல் விழிப்புணர்வு பற்றி  எடுத்துரைத்தோம். மேலும் என் தோழியான வி பரமேஸ்வரிஓட்டு  அளிப்பதன் உறுதிமொழியை கூறினார். அவர் கூறக் கூற அதனை நாங்களும் கூறினோம்.


      மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.














































































Comments

Popular posts from this blog

பாரதி உலா

பாரதி உலா

ஆசிரியர் தினவிழா