கல்வி சுற்றுலா.

கல்விச் சுற்றுலா 


     பாரத் கல்வியல் கல்லூரியில் கல்வி சுற்றுலாவிற்காக தஞ்சாவூரில் அமைந்துள்ள அரண்மனைக்கு கல்லூரி வாகனத்தில் 11 மணி அளவில் சென்றோம். அரண்மனைக்குச் செல்ல நுழைவு சீட்டு ரூபாய் 50 அளித்து அரண்மனையே சுற்றி பார்க்க தொடங்கினோம் முதலில் சரஸ்வதி  மகாலில் பழமை வாய்ந்த புத்தகங்கள் இருந்தன. முந்திய  ஆசிய வரைபடங்கள் கண்டு மேலும் போர் ஆயுதங்களை கண்டு மகிழ்ந்தோம்.

       



     பின்பு தஞ்சாவூரின் வரலாற்றை மிக விரைவாகவும் விரிவாகவும்  சரஸ்வதி மகால் அரண்மனை வரைபடம் கும்பகோணம் புகழ்பெற்ற கோவில்கள் மண் பாண்டங்கள் செய்வது குத்து விளக்கு தயாரிப்பது தஞ்சையில் புகழ்பெற்ற தலையாட்டி  பொம்மை தஞ்சாவூர் தட்டு இவையெல்லாம் திரையில் பார்த்து மகிழ்ந்தோம்.





       இதற்கு அடுத்து நடராஜர் சிலை பார்வதி சிலை ராஜராஜ சோழனின் சிலை அவர் பயன்படுத்திய ஆடை அணிகலன்கள் பழங்கால நாணயங்கள் ஆயுதங்கள் பழங்கால வீட்டு உபயோகப் பொருட்கள் இவையெல்லாம் கண்டு மகிழ்ந்தோம்.  மேலும் நீல திமிங்கலத்தை கண்டு  மகிழ்ந்தோம்.அங்கிருந்து சுரங்க பாதையையும் கண்டறிந்தோம். வெளியே வந்து மதிய உணவை அனைவரும் உண்டோம். மேலும் கல்லூரி வாகனத்தில் நாலு மணி அளவில் கல்லூரிக்கு வந்தடைந்தோம். 















































































Comments

Popular posts from this blog

பாரதி உலா

பாரதி உலா

ஆசிரியர் தினவிழா