Posts

Showing posts from March, 2019

தையல் கலை.

Image
தையல்   வகுப்பு             பாரத் கல்வியல் கல்லூரியில் உள்ள தையல்  வகுப்பிற்கு மாணவ-மாணவிகளே அழைத்துச் சென்றனர். அங்கு இரண்டு வகையான தையல் எந்திரங்கள் அதிகமிருந்தன. ஒவ்வொரு இயந்திரத்திலும் மாணவர்கள் அமர்ந்திருந்தன.            தையல் ஆசிரியர் தையல் இயந்திரத்தை எவ்வாறு இயக்க வேண்டும் என  கற்றுக் கொடுத்தார். தையல் இயந்திரத்தின் வரலாறு மற்றும் அதன் பாகங்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். தையல் இயந்திரத்தின் பயன்பாடுகளை மாணவர்களுக்கு விளக்கினார்.         பாரத் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுபத்ரா அவர்கள் தையல்  தொழிலின் முக்கியத்துவத்தையும் அத்தொழில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதையும் விளக்கினார்.

கல்வி சுற்றுலா.

Image
கல்விச் சுற்றுலா        பாரத் கல்வியல் கல்லூரியில் கல்வி சுற்றுலாவிற்காக தஞ்சாவூரில் அமைந்துள்ள அரண்மனைக்கு கல்லூரி வாகனத்தில் 11 மணி அளவில் சென்றோம். அரண்மனைக்குச் செல்ல நுழைவு சீட்டு ரூபாய் 50 அளித்து அரண்மனையே சுற்றி பார்க்க தொடங்கினோம் முதலில் சரஸ்வதி  மகாலில் பழமை வாய்ந்த புத்தகங்கள் இருந்தன. முந்திய  ஆசிய வரைபடங்கள் கண்டு மேலும் போர் ஆயுதங்களை கண்டு மகிழ்ந்தோம்.              பின்பு தஞ்சாவூரின் வரலாற்றை மிக விரைவாகவும் விரிவாகவும்  சரஸ்வதி மகால் அரண்மனை வரைபடம் கும்பகோணம் புகழ்பெற்ற கோவில்கள் மண் பாண்டங்கள் செய்வது குத்து விளக்கு தயாரிப்பது தஞ்சையில் புகழ்பெற்ற தலையாட்டி  பொம்மை தஞ்சாவூர் தட்டு இவையெல்லாம் திரையில் பார்த்து மகிழ்ந்தோம்.               இதற்கு அடுத்து நடராஜர் சிலை பார்வதி சிலை ராஜராஜ சோழனின் சிலை அவர் பயன்படுத்திய ஆடை அணிகலன்கள் பழங்கால நாணயங்கள் ஆயுதங்கள் பழங்கால வீட்டு உபயோகப் பொருட்கள் இவையெல்லாம் கண்டு மகிழ்ந்தோம். ...

கைவினைப் பொருட்கள்

Image
கைவினைப் பொருட்கள் கண்காட்சி        பாரத் கலை மற்றும் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் கைவினைப் பொருட்கள் ஏற்படுத்தினார்கள். அதில் எங்களுக்கும் ஒரு வாய்ப்பளித்தனர். கல்வியல் கல்லூரி முதல்வர் அம்மா  டாக்டர் சுபத்ரா அவர்கள் எங்களையும் அதில் கலந்து கொள்ள  அனுமதி தந்தார்கள்.               கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்த்து மகிழ்ந்து வந்தோம். அதையொட்டி நான் செயின் வாங்கினேன். எனது தோழி தோடு வாங்கினாள் இதேபோல் எங்கள் மாணவிகள் எல்லோரும்  ஒவ்வொரு பொருட்கள் வாங்கி கைவினைப் பொருட்களை   வாங்கி மகிழ்ந்தோம். அங்கு வந்திருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும்  ஒவ்வொரு ஊரில் இருந்து வந்தவர்கள். நாமக்கல் வேளாங்கண்ணி கடலூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து கைவினைப் பொருட்களை கொண்டு வந்தார்கள். அதை நாங்கள் வாங்கி மகிழ்ந்தோம்.

மகளிர் தின விழா..

Image
மகளிர் தினம்                                              எமது பாரத்  கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு  பாரத் கல்வி   குழுமத்தின் செயலர் அம்மா அவர்கள் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினோம். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கவிஞர் " மனுஷி"  அவர்கள் கலந்துகொண்டு பெண்களைப் பற்றிய சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. என் கல்லூரி  மாணவிகள் நடன போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசினைப்  பெற்றார்கள்.               இதனை தொடர்ந்து  பல்வேறு கலை நிகழ்ச்சி  பரிசளித்த லும் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தை எமது பாரத் கல்லூரியில் அனைத்து பேராசிரியர் மற்றும் மாணவ மாணவிகளுடன் கொண்டாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. ...