Posts

களப்பயணம் ( கஜா புயல்) 19/12/18

Image
கஜா புயல்          நெற்களஞ்சியம் மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இயற்கை சீற்றம் கஜா புயலாகும். புயலின் காரணமாக டெல்டா   மாவட்டமே இயற்கை அழகே  இழந்தது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் இயன்ற உதவியே செய்ய வேண்டும் என்று பி. சுபத்ரா அம்மா அவர்கள் எங்களிடம் எடுத்துக் கூறினார்.        அதற்காக கல்லூரி செயலர் அம்மா அவர்கள்  எங்களுக்கு உதவும் வகையில் கல்லூரியின்  பேருந்தை தயார் செய்து கொடுத்தார். அதில் கல்வியல் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் புதுக்கோட்டை மாவட்ட  மக்களின்   மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அரிசி, மெழுகுவர்த்தி போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. அப்பகுதியில் வீடுகளை   இழந்து தவிக்கும் மக்களைப் பார்த்து என் மனம் மிகவும்   கவலையாக இருந்தது.

இசை வகுப்பு

Image
இசை வகுப்பு       28. 11. 18 இன்று மாலை 3 மணி அளவில் பாடல் வகுப்பு நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இசை அமைப்பாளர் திரு. சங்கர் அவர்கள் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் பாடப்பட்டு நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டார். இந்த நிகழ்வு மாணவர்களுக்கு மிகவும் உதவும் வகையில் அமைந்தது. பின்னர் மாணவ மாணவிகள் சார்பில் எமது தோழி     நன்றி உரை வழங்கினார். இறுதியாக தேசிய கீதம் பாடப்பட்டு இனிதே நிறைவடைந்தது.

பாரதி உலா

Image
பாரதி உலா        பாரதி உலா பாரத் கல்வியல் கல்லூரி வளாகத்தில் விசுவின் கல்வி அறக்கட்டளை சார்பில் பாரதியின்  சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் புதிய முயற்சி என்னும் பெயரில் பாரதி உலா நடைபெற்றது. இதனை வழிநடத்திச் சென்றவர் இயக்குனர் முத்துராமன் ஆவார். இதன் குறிக்கோள் ஒரு வருடத்திற்கு 15 ஊர்களில்  31 நிகழ்ச்சியை நடத்துவதே ஆகும்.    அந்த வகையில் இந்த ஆண்டு எமது கல்லூரியில் நான்காவது நிகழ்ச்சியாக நடைபெற்றது. இதில் எங்கள் கல்வி குழுமத்தின் செயலர் அம்மா அவர்கள் சிறப்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக நடிகைகள் பங்கேற்ற எஸ்  பி. முத்துராமன் அவர்களுக்கு  பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார்.             தஞ்சை  தாமு  அவர்கள் தொகுப்புரை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாட்டு ,கவிதை போட்டிகள் நடைபெற்றது. இதில் எம் கல்லூரி மாணவிகள் பாட்டுப்போட்டியில் சேர்ந்து பரிசினைப் பெற்றார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ...

வானொலி நிகழ்ச்சி

Image
வானொலி நிகழ்ச்சி        29.10. 18  இன்று வானொலி நிகழ்ச்சி எங்கள் கல்லூரியில் நடைபெற்றது. இது 11 மணி அளவில் கல்லூரி கலாட்டா என்னும் நேரடி நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பங்கேற்றோம். இந்த நிகழ்ச்சியில் என் தோழி காவியா அன்னை தெரசாவின் சிந்தனையை கூறினாள்.  நான் ஒரு கவிதை ஒன்றே கூறினேன். பல்வேறு மாணவ மாணவிகள் நேரடியாக பங்கேற்றனர். கல்லூரி கலாட்டா என்னும் நிகழ்ச்சி சிறப்பாக இருந்தது. மாணவர்கள் மகிழ்ச்சியாக பங்கேற்றோம்.

ஸ்போகேன் இங்கிலீஷ் வகுப்பு 25/10/18

Image
கம்யூனிகேஷன் ஸ்கில்      ஆங்கிலம் எளிமையாக உரையாட கற்றுக் கொடுத்தார். கம்யூனிகேஷன் ஸ்கில் என்ற விழிப்புணர்வு பாரத் கல்வியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.   முடியரசு அவர்கள் ஆங்கிலத்தின் முக்கியத்துவத்தை பற்றி தெளிவாக எடுத்துரைத்தார்.    ஆங்கிலம் எவ்வாறு பேச வேண்டும் என்று விரிவாக விளக்கினார். டிவிடி ஒன்றில்   ஆங்கிலம் பேசுவது எப்படி எனவும் மற்றும் புத்தகங்கள் ஆகியவை விற்பனை செய்தார். இந்த வகுப்பு எங்கள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது.    அந்த புத்தகங்களிலிருந்து ஆங்கிலம் எவ்வாறு பேச வேண்டும் என்று கற்றுக் கொண்டோம். இந்த வகுப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அனைவரும் கவனத்துடன் ஆர்வமாகவும் கவனித்தோம். இதில் நிஷா, தஷ்நீம் ஆகிய இருவரும் ஆங்கிலத்தில் உரையாடல் நடத்தினர். இந்த வகுப்பு மிகவும் பயனுள்ள வகையில் அமைந்தது.

ஆயுத பூஜை 17/10/18

Image
ஆயுத பூஜை       கல்வியல் கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர் பயிற்சி முதல்வர் அவர்களுடன் சேர்ந்து ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடினோம். புத்தகம், எழுதுகோல், ஆயுதங்கள், அலுவலக குறிப்பேடுகள் போன்ற அனைத்தையும் வைத்து அவள், பொறி வைத்து முதல்வர் சூட ன் ஏற்றி சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜையை சிறப்பாக கொண்டாடினோம். இவ்விழாவில் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பக்தி பாடல்கள் பாடியது மிக அருமையாக இருந்தது... 

நெகிழி விழிப்புணர்வு

Image
AWARNES ON "ONE TIME USE PLASTICS"         தற்போது நிலவும் நெகிழிப்பைத்  தாக்கத்தையும் அதை நீக்குவதற்கு தேவையான வழிமுறைகளையும் வழங்குவதற்காக பாரத் கல்வியல் கல்லூரியில் நெகிழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக உயிரி தொழில் நுட்பத்துறை பேராசிரியர் ஜவஹர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையிலும் உரையாடற்றினார். எங்களுக்கு மிகவும் பயன்னுள்ளதாக இருந்தது.                 பாலிதீன் பை - எமனின்    பாசக் கயிறு போல   தவிர்த்திடுங்கள் தோழா  இனியெம் தலைமுறைகள்  உயிர் வாழ.