குடியரசு தினம் 26/01/19
குடியரசு தின விழா 69 ஆவது குடியரசு தின விழா நமது பாரத் கல்வியல் கல்லூரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முதல் நிகழ்வாக கல்லூரி வளாகத்தில் காலையில்உணவு மேலாண் துறை மாணவர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. பின் அதனை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு பின் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பிறகு திரு . அறவாழி அவர்கள் உறுதிமொழி கூற அதை மீண்டும் மாணவர்கள் கூறினார்கள். பாரத் கல்லூரி முதல்வர் டாக்டர். வீராசாமிஅவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் கல்வியல் கல்லூரிமுதல்வர் சிறப்புரையாற்றினார். இறுதியாக இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.