Posts

பாரதி உலா

Image
பாரதி உலா            பாரத் கல்வியல் கல்லூரி வளாகத்தில் விசுவின் கல்வி அறக்கட்டளை சார்பில் பாரதியின்  சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் புதிய முயற்சி என்னும் பெயரில் பாரதி உலா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நம் செயலர் திருமதி. புனிதா கணேசன் அவர்களும் திரைப்பட நகைச்சுவை நடிகரான திரு. டெல்லி கணேசன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.                         இந்நிகழ்ச்சியில் வரவேற்புரையை உரத்த சிந்தனையின் செயலர் திரு. சேகர் அவர்கள்  வழங்கினார். அதனைத் தொடர்ந்து வாழ்த்துரையை பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் திரு. வீராசாமி அவர்கள் வழங்கினார். பிறகு நம் செயலர் அம்மா அவர்களும் திரு. டெல்லி கணேசன் அவர்களும் தனது நகைச்சுவை பேச்சால் அனைவரையும் கவர்ந்தனர். இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளும் பேச்சு மற்றும் பாட்டு  போட்டிகள்  நடத்தியதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது. தஞ்சை தாமு அவர்கள் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழ...

காந்தி ஜெயந்தி

Image
காந்தி ஜெயந்தி விழா         மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு  பாரத் கல்வியல் கல்லூரி வளாகத்தில்  அக்டோபர் 1 அன்று  காந்தி ஜெயந்தி விழா  வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கல்வியல் கல்லூரி முதல்வர் திருமதி.  ப. சுபத்ரா  அவர்கள்  கலந்து கொண்டார்கள்.  கல்வியல் கல்லூரி பேராசிரியரான திரு. தமிழ்செல்வன்  தொகுத்து வழங்கினார்.

ஆசிரியர் தினவிழா

Image
ஆசிரியர் தினம்        டாக்டர். ராதாகிருஷ்ணன்  அவர்களின் பிறந்த நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. பணியிடை பயிற்சி சென்றுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின விழா

Image
சுதந்திர தின விழா            சுதந்திர தின விழா  பணி முன் பயிற்சி சென்றுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் தேசப்பற்றுடன் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.       சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு பல தலைப்புகளில் பேச்சு கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சுதந்திர தினம் அன்று பல பரிசுகள் வழங்கப்பட்டன.   இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு. சேகர் அவர்கள் கலந்து கொண்டார்.                                                                                முதல் நிகழ்வாக தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சிறப்பு விருந்தினர் அவர்கள் தேசியக் கொடியினை ஏ...

காமராசர் பிறந்த நாள்

Image
காமராசர் பிறந்த நாள் விழா       பாரத் கல்வியல் கல்லூரி வளாகத்தில் காமராசரின் பிறந்த நாள் விழா  கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் அவரது பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அதை நினைவு கூறும் வகையில் எமது கல்வியல் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து    வழங்கினார்கள்.        முதல் நிகழ்வாக வரவேற்புரையை கல்வியல் கல்லூரி பேராசிரியர் திருமதி. ராஜலட்சுமி அவர்கள் சிறப்பாக வழங்கினார். இந்நிகழ்ச்சியை கல்வியல் கல்லூரி பேராசிரியர் திரு. தமிழ்ச்செல்வன் அவர்கள் தொகுத்து வழங்கினார். இதனை தொடர்ந்து எமது கல்வியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவி காவியா தனது கம்பீர பேச்சால் ஒரு கவிதை ஒன்றை வாசித்தார்.                                                 அடுத்த நிகழ்வாக இரண்டாமாண்டு மாணவ மாணவிகள் நாடகம் ஒன்றை அரங்கேற்றினார்கள். இறுதியாக நன்றி உரையை இரண்டாம் ஆண்டு மாணவி அவர்கள்...

ஆண்டு விழா.

Image
ஆண்டு விழா      பாரத் கல்வியல் கல்லூரி 16 வது ஆண்டு விழா நடைபெற்றது. நான் இந்த கல்லூரியில் சேர்ந்து முதலாவது ஆண்டு விழா.    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மகேசன் அவர்களும் செயலர் அம்மா அவர்களும் கல்வியல் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.        கல்வியல் கல்லூரி தோழர் மற்றும் ஆசிரியர் பயிற்சி முதல்வர் மாணவர்களும் பணி புரியும் படி ஆண்டறிக்கை வாசித்தார். கலை நிகழ்ச்சி தொடங்கியது சிறப்பு விருந்தினர்கள்  கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.          பின்பு நடன நிகழ்ச்சி தொடங்கியது. கல்வியல் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒரு குழுவாக நடனமாடினார்கள். எனது வகுப்பு மாணவி முதல்வர் ஆணையால் பரமேஸ்வரி மற்றும்  யாழினி யாழ் இருவரும் தனித்தனியாக பாடல்கள் பாடினார்கள். இரண்டாம் ஆண்டு மாணவன்  மணியரசன் கவிதை வாசித்தார்.  ஆண்டு விழா சிறப்பாக நிறைவு பெற்றது. ...

இன்பச் சுற்றுலா.

Image
இன்பச் சுற்றுலா         எங்கள் பாரத் கல்வியல் கல்லூரி முதல்வர்  அம்மா அவர்கள் மற்றும் இருபால்  பேராசிரியர் அனைவரும் இன்பச் சுற்றுலா செல்லலாம் என்று திட்டமிட்டு வந்தனர்.  மூன்று நாள்  மட்டும் செல்லலாம் என்று  முடிவெடுத்தனர். பாரத் கல்வியில் குழு செயலர் அம்மா திருமதி புனிதா கணேசன் அவர்கள் சுற்றுலாவுக்கு அனுமதி   வழங்கியதே தொடர்ந்து  இரண்டு நாட்கள்  ஊட்டி செல்ல திட்டமிட்டனர். இந்த இன்பச் சுற்றுலா வானது கல்வியல் கல்லூரி முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம்  ஆண்டு மாணவ மாணவிகள் கல்விச் சுற்றுலாவிற்கு ஊட்டி சென்றோம்.   தமிழ்நாட்டில் மிகப்பெரிய மழை சிகரம்  தொட்டபெட்டாஆகும். அங்கு தேயிலையே பயன்படுத்தி தேயிலைத்தூள் கலந்து தேநீர் வழங்கப்பட்டது.  தேனீர் ஆனது மிகவும் சுவையாக இருந்தது. நான் தேயிலை தூள் வீட்டிற்கு வாங்கி வந்தேன்.      இறுதியாக மெழுகுவர்த்தி அருங்காட்சியகம் பேய் வீடு போன்ற இடத்திற்கு சென்றோம். அருங்காட்சியகத்தில் மெழுகுவர்த்தியை பயன்படுத்தி நிறைய தலைவர்கள் உ...

தேர்தல் விழிப்புணர்வு பேரணி

Image
தேர்தல் விழிப்புணர்வு            பாராளுமன்ற தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஆட்சியர் கல்வியல் பல்கலைக்கழகம்  தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியை  நடத்துமாறுசுற்றறிக்கை அனுப்பியது. அதன்படி பாரத் கல்வியியல் கல்லூரி முதல்வர் அவர்கள் பாரத் கல்வியல் குழும செயலர் திருமதி புனிதா கணேசன் அவர்களின்ஒப்புதலின் பெயரில் கல்வியல் கல்லூரி முதல்வர் திருமதி. ப. சுபத்ரா மற்றும் பேராசிரியர்கள் கலந்துரையாடி அன்று தேர்தல் விழிப்புணர்வு பேரணி செல்ல முடிவெடுத்தனர்.                     கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டது தொடர்ந்து எங்கள் கல்வியல் கல்லூரி  பொருள் அறிவியல் துறை பேராசிரியர் சுரேஷ் குமார் அவர்கள் தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் அனுமதி பெற்று பின்பு அனுமதி பெற்ற ஒப்புதல் கடிதத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் மருத்துவ கல்லூரி காவல் நிலையத்திலும் வழங்கி அவர்களின் அனுமதி பெற்றார்.              அதனைத்தொடர்ந்து காலை 10 மணி முதல் 11 ...

தையல் கலை.

Image
தையல்   வகுப்பு             பாரத் கல்வியல் கல்லூரியில் உள்ள தையல்  வகுப்பிற்கு மாணவ-மாணவிகளே அழைத்துச் சென்றனர். அங்கு இரண்டு வகையான தையல் எந்திரங்கள் அதிகமிருந்தன. ஒவ்வொரு இயந்திரத்திலும் மாணவர்கள் அமர்ந்திருந்தன.            தையல் ஆசிரியர் தையல் இயந்திரத்தை எவ்வாறு இயக்க வேண்டும் என  கற்றுக் கொடுத்தார். தையல் இயந்திரத்தின் வரலாறு மற்றும் அதன் பாகங்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். தையல் இயந்திரத்தின் பயன்பாடுகளை மாணவர்களுக்கு விளக்கினார்.         பாரத் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுபத்ரா அவர்கள் தையல்  தொழிலின் முக்கியத்துவத்தையும் அத்தொழில் பெண்களுக்கு எவ்வளவு முக்கியமானவை என்பதையும் விளக்கினார்.

கல்வி சுற்றுலா.

Image
கல்விச் சுற்றுலா        பாரத் கல்வியல் கல்லூரியில் கல்வி சுற்றுலாவிற்காக தஞ்சாவூரில் அமைந்துள்ள அரண்மனைக்கு கல்லூரி வாகனத்தில் 11 மணி அளவில் சென்றோம். அரண்மனைக்குச் செல்ல நுழைவு சீட்டு ரூபாய் 50 அளித்து அரண்மனையே சுற்றி பார்க்க தொடங்கினோம் முதலில் சரஸ்வதி  மகாலில் பழமை வாய்ந்த புத்தகங்கள் இருந்தன. முந்திய  ஆசிய வரைபடங்கள் கண்டு மேலும் போர் ஆயுதங்களை கண்டு மகிழ்ந்தோம்.              பின்பு தஞ்சாவூரின் வரலாற்றை மிக விரைவாகவும் விரிவாகவும்  சரஸ்வதி மகால் அரண்மனை வரைபடம் கும்பகோணம் புகழ்பெற்ற கோவில்கள் மண் பாண்டங்கள் செய்வது குத்து விளக்கு தயாரிப்பது தஞ்சையில் புகழ்பெற்ற தலையாட்டி  பொம்மை தஞ்சாவூர் தட்டு இவையெல்லாம் திரையில் பார்த்து மகிழ்ந்தோம்.               இதற்கு அடுத்து நடராஜர் சிலை பார்வதி சிலை ராஜராஜ சோழனின் சிலை அவர் பயன்படுத்திய ஆடை அணிகலன்கள் பழங்கால நாணயங்கள் ஆயுதங்கள் பழங்கால வீட்டு உபயோகப் பொருட்கள் இவையெல்லாம் கண்டு மகிழ்ந்தோம். ...

கைவினைப் பொருட்கள்

Image
கைவினைப் பொருட்கள் கண்காட்சி        பாரத் கலை மற்றும் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் கைவினைப் பொருட்கள் ஏற்படுத்தினார்கள். அதில் எங்களுக்கும் ஒரு வாய்ப்பளித்தனர். கல்வியல் கல்லூரி முதல்வர் அம்மா  டாக்டர் சுபத்ரா அவர்கள் எங்களையும் அதில் கலந்து கொள்ள  அனுமதி தந்தார்கள்.               கைவினைப் பொருட்கள் கண்காட்சியை பார்த்து மகிழ்ந்து வந்தோம். அதையொட்டி நான் செயின் வாங்கினேன். எனது தோழி தோடு வாங்கினாள் இதேபோல் எங்கள் மாணவிகள் எல்லோரும்  ஒவ்வொரு பொருட்கள் வாங்கி கைவினைப் பொருட்களை   வாங்கி மகிழ்ந்தோம். அங்கு வந்திருக்கும் பெண்கள் ஒவ்வொருவரும்  ஒவ்வொரு ஊரில் இருந்து வந்தவர்கள். நாமக்கல் வேளாங்கண்ணி கடலூர் போன்ற பல மாவட்டங்களில் இருந்து கைவினைப் பொருட்களை கொண்டு வந்தார்கள். அதை நாங்கள் வாங்கி மகிழ்ந்தோம்.

மகளிர் தின விழா..

Image
மகளிர் தினம்                                              எமது பாரத்  கல்வியியல் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு  பாரத் கல்வி   குழுமத்தின் செயலர் அம்மா அவர்கள் மற்றும் அனைத்து துறை பேராசிரியர்களும் அலுவலக பணியாளர்களும் மாணவ மாணவிகளும் கலந்துகொண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினோம். நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கவிஞர் " மனுஷி"  அவர்கள் கலந்துகொண்டு பெண்களைப் பற்றிய சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. என் கல்லூரி  மாணவிகள் நடன போட்டியில் கலந்துகொண்டு முதல் பரிசினைப்  பெற்றார்கள்.               இதனை தொடர்ந்து  பல்வேறு கலை நிகழ்ச்சி  பரிசளித்த லும் நடைபெற்றது. உலக மகளிர் தினத்தை எமது பாரத் கல்லூரியில் அனைத்து பேராசிரியர் மற்றும் மாணவ மாணவிகளுடன் கொண்டாடியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்தது. ...

புனித அந்தோனியார் நடுநிலை பள்ளி

Image
புதுமைப் பள்ளி பார்வையிடல்           புனித அந்தோணியார் நடுநிலைப்பள்ளி    மானம்புச்சாவடி அமைந்துள்ளது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அமைந்துள்ளது. விடுதி வசதியும் உள்ளது. இங்கு பயிலும் சில மாணவர் மாணவிகளுக்கு தாய் தந்தையற்ற அனாதை குழந்தைகள். அவர்கள் அரசு உதவியுடன் இப்பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளி அரசு உரிமை பெற்ற பள்ளியாகும்.    அங்குள்ள பெண் பாதிரியார்கள் எங்களுடன் அன்பாக பழகினார். இரண்டு நாட்கள் ஆங்கில வகுப்பு நடக்கும்போது உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஸ்பாடிக்ஸ் மேல்நிலை பள்ளி

Image
புதுமைப் பள்ளி பார்வையிடல்         இன்று இந்த பள்ளிக்கு வந்தோம். இங்கு மழலையர் முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியின் முதல்வர் கீழே உள்ள கிராமத்தை சேர்ந்தவர். இரண்டு நாட்கள் இப்பள்ளிக்கு உற்றுநோக்கல்  பயிற்சிக்காக வந்திருக்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தகுந்த மரியாதையுடன் எங்களை வரவேற்றனர்.         தனியறை கொடுக்கப்பட்டது. இங்கு உள்ள குழந்தைகளும் ஆசிரியர்களும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டனர்.   இங்கு காலையில் நடைபெறும் இறைவழிபாடு மிகவும் சிறப்பாக உள்ளது. அதில் எங்களுக்காகவும் வேண்டிக்கொண்டனர். இரண்டு நாட்கள் உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புது புது தகவல்களை அறிந்துகொண்டேன்.

ராஜா அரசினர் மேல்நிலைப்பள்ளி

Image
புதுமைப் பள்ளி பார்வையிடல்                           ராஜா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாட்கள் உற்றுநோக்கல் பயிற்சிக்காக சென்றோம்.  நாங்கள் எட்டுப்பேர் ஒரு குழுவாக சென்றோம். ராஜா அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. தலைமையாசிரியர் மற்றும் துணை தலைமை ஆசிரியர் அவர்கள் எங்களுக்கான உற்றுநோக்கல் பயிற்சி  எடுப்பதற்கு அனுமதி அளித்தனர். தகுந்த மரியாதையுடன் நடத்தினார். நான் ஆங்கில வகுப்பு நடக்கும் போது சென்றேன். உற்றுநோக்கல் பயிற்சியை மேற்கொண்டேன். அரசு பள்ளியில் ஆசிரியர் மற்றும் மாணவர் எவ்வாறு இருப்பர் என்பதை அறிந்து கொண்டேன். மேலும் பலவகையான மாணவர்களைப் பற்றி தெரிந்து கொண்டேன். நான் வகுப்பு எடுத்தேன். மேலும் வகுப்பை கண்காணிப்பதற்கும் சென்றேன்.          

குடியரசு தினம் 26/01/19

Image
குடியரசு தின விழா          69 ஆவது குடியரசு தின விழா நமது பாரத் கல்வியல் கல்லூரியில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் முதல் நிகழ்வாக கல்லூரி வளாகத்தில் காலையில்உணவு மேலாண் துறை மாணவர்களின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. பின் அதனை தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு  பின் பாரத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்.         அதன் பிறகு திரு . அறவாழி அவர்கள் உறுதிமொழி கூற அதை மீண்டும் மாணவர்கள் கூறினார்கள். பாரத் கல்லூரி முதல்வர் டாக்டர். வீராசாமிஅவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும் கல்வியல் கல்லூரிமுதல்வர் சிறப்புரையாற்றினார். இறுதியாக இனிப்புகள் வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தனர்.